amrinder singh - 2026

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத்தின் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்! மேலும், பஞ்சாப்பில் பாகிஸ்தான் வாலாட்ட முயற்சி செய்தால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

காஷ்மீர், புல்வாமா தாக்குதலை கண்டித்து பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது உணர்ச்சிகரமாக உரையாற்றிய முதலமைச்சர் அமரீந்தர் சிங், பாகிஸ்தானின் உள்நோக்கங்களை புரிந்துகொண்டு மத்திய அரசு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்றார்

அவர் மேலும் கூறியதாவது… மத்திய அரசு உடனே பதிலடி கொடுக்க வேண்டும். இல்லை எனில் இதேபோல மீண்டும் அவர்கள் வாலாட்ட முயற்சி செய்வார்கள். இம்ரான்கானை பிரதமர் ஆக்கியதே பாகிஸ்தான் ராணுவத் தளபதி கமர் பஜ்வா தான்! பாகிஸ்தான் உளவுத்துறையும் அவரது கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

பஜ்வா ஒரு பஞ்சாபி! பஞ்சாபிகளான தங்களிடமே அவர் வாலாட்ட முயன்றால் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தார் அம்ரீந்தர் சிங்!

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி… அழைக்கிறார் மோதிஜி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending