அரியானா அரசின் அந்தஸ்தை மறுத்தார் பாபா ராம்தேவ்

அரியானா அரசால் வழங்கப்படுவதாக அறிவித்த கேபினட் அமைச்சருக்கு உண்டான அந்தஸ்தை தனக்கு வழங்க வேண்டாம் என யோகா குரு பாபா ராம்தேவ் மறுத்துள்ளார். கடந்த ஏப்ரல் 13ல் அரியானா மாநில அரசு பாபா ராம்தேவுக்கு கேபினட் அமைச்சருக்கான அந்தஸ்து வழங்கப்படும் என்றும், பாபா ராம்தேவ் யோகா மற்றும் ஆயுர்வேதத்தை ஊக்குவிக்க மாநில அரசின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவித்திருந்தது. இதனை மாநில கல்வித் துறை அமைச்சர் ராம்விலாஸ் சர்மா அறிவித்திருந்தார். இந்நிலையில், அரியானா அரசு இன்று ராம்தேவை கௌரவிப்பதற்காக பஞ்ச்குலா இந்தரதனுஷ் ஸ்டேடியத்தில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.