கமலுக்கு எதிரான வழக்கு! தில்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி!

Published:

kamal torch2 - 2026

தமிழக விவகாரம் குறித்து தில்லியில் வழக்கு தொடருவது ஏன் என்று கூறி, தில்லி உயர் நீதிமன்றத்தில் கமலுக்கு எதிராக பாஜக தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றும் அது நாதுராம் கோட்சே என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின் போது பேசியிருந்தார். இதனை எதிர்த்து பாஜக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கமலின் கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது. இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் கமல்ஹாசன், இவ்வாறு பேசி இருப்பதாகவும் அந்த மனுவில், குற்றம் சாட்டப்பட்டது.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை இன்று விசாரிப்பதாகக் கூறியிருந்த நீதிபதிகள், பின்னர் இன்று தள்ளுபடி செய்தனர். தமிழ்நாட்டில் நடந்த விவகாரம் குறித்து தில்லியில் வழக்கு தொடர்வது ஏன் எனக் கேட்டு, மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Related articles

Recent articles

spot_img