பிரதமர் மோடி தடாசனா மற்றும் திரிகோனாசனா போன்ற யோகாசனங்கள் செய்வது போன்ற அனிமேஷன் வீடியோ வெளியாகியுள்ளது.
சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு, பிரதமர் மோடி யோகா செய்வது போன்ற அனிமேஷன் வீடியோ ஒன்று அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆசனங்களை செய்தால், மற்ற ஆசனங்களை எளிதாக செய்ய முடியும் என்றும் அந்த டுவிட்டர் பதிவில் மோடி பதிவிட்டுள்ளார்.