shikar dhawan - 2026

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று விளையாடும் இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் இடம் பெற்றிருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் அவர் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப் பட்டுள்ளார்.

நாளை மறுநாள் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் நிலையில், ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஷிகர் தவானுக்கு ஏற்பட்ட காயம் குறித்து பரிசோதித்த இந்திய அணி மருத்துவ குழு, அவர் 3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

இதை அடுத்து தவான் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு இழப்பு தான்.

ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் யாராவது சேர்க்கப்படலாம் என கூறப் படுகிறது.

ALSO READ:  தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending