aswini - 2026தொழிநுட்பத்தின் காரணமாக  வளர்ச்சி ஒருபக்கம் பலவித நன்மைகளை அள்ளித்தருகிறது. இருந்தாலும் சில சமயங்களில்  பல்வேறுவிதமான கெடுதல்களையும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதில் குறிப்பாக கைப்பேசி.

இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை  அது இல்லாத நபர்களே இல்லை எனும் அளவிற்கு அது ஒரு கையாக செயல்படுகிறது.

செல்போனால் 22 வயது இளம் பெண் ஒருவர் ரயிலில் தவறி விழுந்து உடல் துண்டான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கைதராபாத்தை சேர்ந்த அஸ்வினி என்ற இளம் பெண் தினமும் பணிக்காக தனது வீட்டின் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில் ஏறி பணிக்கு சென்றுவந்துள்ளார்.  சம்பவத்தன்றும்  வழக்கம்போல அஸ்வினி ரயிலில் பணிக்கு சென்றுள்ளார்.

அஸ்வினி இறங்கும் ரயில் நிலையம் வந்ததும் ரயிலில் இருந்து வேகமாக இறங்கியுள்ளார்.

அப்போது அஸ்வினி கையில் இருந்த செல்போன் தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது. தவறி விழுந்த செல்போனை எடுக்க அஸ்வினி முற்படும்போது ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையில் அவரது உடல் சிக்கி இழுத்து செல்லப்பட்டது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

tejas train - 2026இந்நிகழ்வு ரயில் நிலையத்தில் கூடியிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே ரயில், பேருந்து போன்றவற்றில் பயணம் செய்யும்போது தயவு செய்து மிகவும் கவனமாக பயணம் செய்யவது அவசியம் ஆகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending