மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பந்த்ரா மேற்கு பகுதியின் எஸ்வி ரோட்டில் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு சொந்தமான எம். டி.என்.எல் தொலைத்தொடர்பு துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3வது மற்றும் 4 மாடியில் நேற்று திடீரென பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
முதலில் சிறிதாக ஏற்பட்ட தீ, பிறகு மளமளவென பரவத் தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. மேலும், அந்த கட்டடத்திற்குள் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியிருந்ததாக தகவல் வெளியானது.
பணியில் இருந்த ஊழியர்கள் வெளியே ஓடி வரமுடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டதால் ஜன்னல் வழியாகவும் மொட்டை மாடிக்கு சென்றும் உதவி கோரி அழைத்தனர். கட்டடத்திற்குள் ஏராளமானோர் சிக்கியிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, 14 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரமாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதற்குள் சிக்கியிருந்த 84 பேர் காயமில்லாமல், ராட்சத கிரேன்கள் மூலமும் மிகப்பெரிய ஏணிகள் மூலமும் பத்திரமாக மீட்கப்பட்டனர். முதன்முறையாக தீயணைப்புத் துறையினர் நவீன ரோபோ கருவிகளையும் பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதனிடையே, பிவாண்டி பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. எரிமலை போல் வெடித்து சிதறிக் கொண்டிருந்த தீயினை, தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
&
Maharashtra: Fire broke out in a chemical godown in Bhiwandi. Fire fighting operations underway. pic.twitter.com/CM3iG9yO1x
— ANI (@ANI) July 23, 2019
;
Mumbai Fire Brigade is taking the help of the newly introduced robot to douse the fire at the MTNL (Mahanagar Telephone Nigam Limited) building in Bandra. pic.twitter.com/94DdzWdgz4
— ANI (@ANI) July 22, 2019