
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதை அடுத்து, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக 2 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று மாலை 4 மணிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனைகளின் போது, தொகுதி தொடர்புடைய மாவட்டங்களில் மேற்கொள்ளப் பட வேண்டிய தேர்தல் விதிகள், கட்டுப்பாடுகள், கண்காணிப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக பேசப்படும் என்று கூறப்படுகிறது.