
30-ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம்: மண்டல வேலைவாய்ப்பு உதவி அதிகாரி சுஜித்குமார் சாகும் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
ஆதி திராவிடர் பழங்குடியினருக்கான மத்திய அரசின் தேசிய வாழ்க்கை போக்கு சேவை மையம் சென்னை சாந்தோமில் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் ஒர்க் பிரிக்ஸ் கார்ப்பரேஷன் கார்ப்பரேட் நிறுவனத்துடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை சென்னையில் வரும் 30-ஆம் தேதி நடத்துகிறது
பிபிஓ வங்கி பிரிவு காப்பீட்டு பிரிவு மின்னணு வணிகம் கல்வி தகவல் தொழில்நுட்பம் விளம்பரத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தனியார் நிறுவனங்களில் புதிய மற்றும் அனுபவம் இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன
மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் 22 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
பிளஸ்-2 படித்தவர்கள் பங்குபெறலாம் அவர்களுக்கும் இதில் வாய்ப்பு உண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டுமல்லாமல் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் Www.workfreaks.in/applyjob என்ற இணையதள முகவரியில் 28ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்யாதவர்கள் நேரடியாக வந்து பதிவு செய்யலாம்
ஆதி திராவிடர் பழங்குடியினருக்கான தேசிய வாழ்க்கைப் போக்கு சேவை மையம் சாந்தோம் நெடுஞ்சாலை சென்னை 4 என்ற முகவரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் & இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது