
- தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு நாளை மறுநாள் சிறப்பு கட்டண ரயில் இயக்கம்.
- தாம்பரத்தில் இருந்து 26ம் தேதி இரவு 7.20 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 6 மணிக்கு தூத்துக்குடிக்கு சென்றடையும்.
- இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தீபாவளி பண்டியையொட்டி நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையில் இருந்து அக்டோபர் 25ம் தேதி இரவு 9.40க்கு புறப்படும் சிறப்பு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், விழுப்புரம் வழியாக மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 26ம் தேதி இரவு 7.20க்கு புறப்படும் சிறப்பு ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
06031 தாம்பரம் – கொச்சுவெளி முன்பதிவில்லா சிறப்பு ரயில்
அக்டோபர் 26ம் தேதி காலை 7:45க்கு தாம்பரத்தில் புறப்பட்டு அன்றைய தினம் இரவு 11மணிக்கு கொச்சுவெளி சென்றடையும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – கொச்சுவெளி இடையே அக்டோபர் 26ம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 25ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 25ம் தேதி மாலை 3.10க்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் காட்பாடி, சேலம், கோவை, பாலக்காடு, திருச்சூர் வழியாகச் சென்று அடுத்தநாள் காலை 3.50க்கு எர்ணாகுளம் சென்றடையும்.