ஜல்லிகட்டு தமிழகத்தில் நடந்த வன்முறை தொடர்பில் உச்ச நீதி மன்றம் அதிருப்தி

*ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.*
*ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை எதிர்த்து, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் வாதம்.*
*மத்திய அரசு 2016ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளித்து வெளியிட்ட அறிவிக்கையை திரும்பப்பெற அனுமதி அளிக்க வேண்டும் – மத்திய அரசு வழக்கறிஞர்.*
*அறிவிக்கை திரும்பப்பெறப்பட்டாலும், ஜல்லிக்கட்டு வழக்கை முடித்து வைக்கக்கூடாது – விலங்குகள் நல வாரியம்.*
*சட்டப்பேரவையின் அதிகாரத்திற்குட்பட்ட விவகாரத்தை இடைக்கால மனுக்கள் மூலம் எதிர்க்க முடியாது-மத்திய அரசு.*
*இடைக்கால மனுவாகவோ அல்லது மனுவாக தாக்கல் செய்வது மனுதாரரின் விருப்பம் – உச்சநீதிமன்றம் கருத்து.*
*சட்டம் இயற்றுவது சட்டப்பேரவையின் அதிகாரத்திற்குட்பட்டது – உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து.*
*எதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்க்கிறீர்கள்? விலங்குகள் நல வாரியத்திடம் நீதிபதிகள் கேள்வி.*
*ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன? – தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி.*
*ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இன்று குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது – தமிழக அரசு தகவல்.*
*இன்னும் 2 நாளில் ஜல்லிக்கட்டு அவரச சட்டம் காலாவதியாகி, ஜல்லிக்கட்டு சட்டம் அமலுக்கு வந்துவிடும் – தமிழக அரசு.*
*தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றதால் தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மாநில அரசு சட்டம் கொண்டு வந்ததா? உச்ச நீதிமன்றம்.*
*வழக்கு நிலுவையில் உள்ளபோது அது பற்றி பேசவேகூடாது என்பது சட்டம்; இதை மீறி தமிழகத்தில் எப்படி போராட்டம் நடத்தினார்கள்?- உச்சநீதிமன்றம்.*
*சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தமிழகம் கண்காணிக்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதிகள்.*
*சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க மாநில அரசை வலியுறுத்துங்கள் – தமிழக அரசு மூத்த வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறிவுரை.*
*தமிழகத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி.*