10 ரூபாய் நாணயங்கள் சட்டப்படி செல்லுபடியாகும்படி: ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “10 ரூபாய் நாணயங்கள் ரூபாய் குறியீட்டுடனும், ரூபாய் குறியீடு இல்லாமலும் வெளியிடப்பட்டுள்ளன. அவை சற்றே மாறுபட்டு தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாக கூடியவை மற்றும் பரிவர்த்தனைகளுக்கு ஏற்றவை” என்றும் தெரிவித்துள்ளது. மேலும் “பொதுமக்கள் இத்தகு முழு விவரங்களை அறியாததால் தோன்றும் கோட்பாடுகளுக்கு மதிப்பு தராமல், அவற்றை ஒதுக்கித் தொடர்ந்து இந்த நாணயங்களை தங்களின் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் தயக்கமின்றி, சட்டப்படி செல்லுபடியாகும்படி பயன்படுத்திட இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.