இன்றைய முக்கிய செய்திகள்

*தலைப்புச் செய்திகள்*
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் கண்ணன் விலகினார். இதையொட்டி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் ஆளவேண்டும் என்று ஆதரவாளர்கள் மத்தியில் ஜெ.தீபா பேசினார்.
நந்தினி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை கடற்கரையோரம் டீசல் கசிவை ஏற்படுத்திய கப்பல்களை பறிமுதல் செய்யவேண்டும் என்று கோரி பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த 5 வயது சிறுவன், இந்திய அரசின் உதவிடன் சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் தனது தாயுடன் சேர்த்து வைக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தியாவுக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்துள்ளது
பிரசவத்தின்போது நர்ஸ் மரணம் அடைந்ததை அடுத்து எய்ம்ஸ் மகப்பேறு பிரிவின் டாக்டர்கள் 5 பேரை பணி இடைநீக்கம் செய்து ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.
பார்சிலோனாவில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் நோக்கியா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இண்டிகோ விமான பாதுகாப்பு பயிற்சி மைய தேர்வு முறையில் கோளாறு நடந்துள்ளதை அடுத்து பயிற்சி மையத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது
முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, கவர்னர் மூலமாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
ஏமனில் பழங்குடியினர் தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலி
ஏமனில் பழங்குடியினருக்கும் அல்கொய்தா இயக்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலியாகினர்.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான வாட்ஸ்அப் பீட்டா செயலியில் புதிய எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன.
சர்க்கரை நோய் மற்றும் காய்ச்சல் காரணமாக இயற்கை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று மாலை திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
ரெயில்களில் பசுமை கழிவறை திட்டப்பணிகளுக்காக ரூ.1,155 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்டோரில் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 64 ஆயிரம் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
16 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில் ராஜா சோம் செராவத்-உர்மில் தம்பதிக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்
சாம்சங் நிறுவனத்தின் புதி்ய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இங்கு சாம்சங் சி5 ப்ரோ சாதனம்
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்க இருப்பதற்கு, முன்னாள் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் கருப்பு பணம் டெபாசிட் செய்யப்பட்டதா? என்பது தொடர்பாக 1 கோடி வங்கி கணக்குகளை வருமானவரி இலாகா ஆய்வு செய்து உள்ளது.
கருவுற்று 21 வாரங்கள் கடந்த நிலையில் பெண் ஒருவர் கருச்சிதைவு செய்து கொள்வதற்கு அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.
ஜெயலலிதா வழியில் மக்களுக்காக இந்த ஆட்சி செயல்படும் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் வி.கே.சசிகலா கூறினார்.
சத்தீஸ்காரில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் பிரதாப் சிங் மார்க்கம் என்ற ராணுவ வீரர் காயமடைந்தார்.
நேபால எல்லைக்குள் அத்துமீறி சட்ட விரோதமாக நுழைந்த காரணத்திற்காக வங்காள தேசத்தை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து தனது பதவிக் காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்தவரை பாதுகாப்புபடை வீரர்கள் கைது செய்தனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் 4 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்று அதிமுக தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் கருப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கும் அதை ஆதரித்தவர்களுக்கும் சரியான பாடத்தை கற்பித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
மதுவின் கொடுமையால் கொலை, கற்பழிப்பு,பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்ந்து வருகிறது என்று மாதா அமிர்தானந்தமயி பேசினார்.
பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த எம்.எல்.ஏ.க்களுடன் சென்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம் என்று துரைமுருகன் கூறினார்.