இன்றோ நாளையோ ஆளுநர் சென்னை வருவார்: உதவியாளர் தகவல்


மும்பை: 
இன்றோ நாளையோ ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவார் என அவரது உதவியாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராகப் பதவியேற்க தயாராக உள்ள நிலையில், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய ஆளுநர் வித்யாசாகர் ராவ், திடீரென உதகையிலிருந்து தில்லிக்குக் கிளம்பிச் சென்றார்.  பின்னர் அவர் நேற்று தில்லியிலிருந்து அப்படியே, மும்பைக்குப் பறந்து விட்டார்.
Tamilnadu Governor Vidyasagar Rao, will arrive Chennai on today or tomorrow 
இதனால் சசிகலா தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். எனவே மத்திய அரசுக்கு சசிகலாவை முதல்வராக்க விருப்பம் இல்லை என்ற செய்திகள் பரவின. இந்நிலையில், ஆளுநரின் உதவியாளர் உமேஷ் தன்னைத் தொடர்பு கொண்ட செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆளுநர் இன்று மாலை அல்லது நாளை சென்னைக்கு வருவார் என்று கூறினார்.  இதனால் சசிகலா தரப்பினர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இதை அடுத்து, சசிகலா வரும் 9ஆம் தேதி பதவ ஏற்கக் கூடும் என்று தெரிகிறது.