புதுடில்லி, :
அடையாள சான்றாக, 'ஆதார்' அட்டை வழங்கும் திட்டத்திற்காக, பிரதமர் நரேந்திர மோடியை, உலக வங்கி பாராட்டி உள்ளது.
ஆதார் அட்டை திட்டம், முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டாலும், மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு
பதவியேற்ற பின்தான், ஆதார் அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த ஆதார் அட்டையை, அடையாள சான்றாக பயன்படுத்தி, நாட்டின் எந்தப் பகுதியிலும், வங்கிக் கணக்கு துவங்குதல்,அரசு மானியம், விவசாயி களுக்கான மானியம், கல்வி உதவித்தொகை, சமையல் எரிவாயு மானியம் என, அரசு சலுகை களை பெறலாம்.ஆதார் அட்டை திட்டத்திற்காக, பிரதமர் மோடிக்கு, உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து, உலக வங்கி யின் தலைமை பொருளா தார நிபுணர் பால் ரோமர் கூறியதாவது: பணப் பரிவர்த்தனை போன்ற அனைத்துபரிவர்த்தனை களுக்கும், இந்த ஆதார் அடையாள சான்று அடிப்படையானது.
உலகம் முழுவதும், இத்திட்டம் அமல்படுத்தப்பட் டால், பொருளாதார நிலை வளர்ச்சியடையும். உலகம் முழுவதும், சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில், 150 கோடி பேர், தங்கள் அடையாளத் தை நிரூபிக்க முடியவில்லை. இது போன்ற சேவைகளுக்கு, ஆதார் அடையாள அட்டை தேவை.
இந்த திட்டத்தை, இந்தியாவில் தீவிர மாக செயல்படுத்திய, பிரதமர் மோடிக்கு, உலக வங்கி பாராட்டு தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்