நடுரோட்டில்… எம்எல்ஏ., வெளுத்து வாங்கிய குத்து டான்ஸ்!

சற்றுமுன்
ycp mla dance2 - 2026

ஒய்சிபி எம்எல்ஏ ‘பிய்யபு’ மதுசூதனன் ரெட்டி மீண்டும் ஒருமுறை செய்தியில் வந்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபுவின் மீது சட்டமன்றத்தில் வாக்குவாதங்களில் ஆவேசமாக பேசும் மதுசூதன் ரெட்டி இந்த முறை ஸ்டெப் போட்டு குத்து டான்ஸ் ஆடியுள்ளார். அதுவும் நடு ரோட்டில்!

சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டங்களில் பங்குபெற்று எம்எல்ஏ குத்து டான்ஸ் ஆடி ஸ்டெப் போட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது. இந்த விஷயம் இன்றைய பேசப்படும் விஷயம் ஆகியுள்ளது.

ycp mla dance1 - 2026

மனதில் இருப்பதை உள்ளது உள்ளபடியே போட்டு உடைப்பது, விநோதமாக விஷயங்களை விவரித்துச் சொல்வது, அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைப்பது… போன்றவற்றில் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி எம்எல்ஏ பிய்யபு மதுசூதன்ரெட்டி பெயர் பெற்றவர்.

இவர் இந்த முறை டான்ஸ் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தான் ஒரு எம்எல்ஏ என்ற சங்கோஜம் கூட இல்லாமல் மிக அழகாக தன் தொகுதியில் மக்களோடு ஆடிப்பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

சங்கராந்தி தொடர்பாக உள்ளூர் மக்களோடு சேர்ந்து மதுசூதன் ரெட்டி ஸ்டெப் போட்டு ஆடியுள்ளார். தொகுதியில் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட சங்கராந்தி கொண்டாட்டங்களில் எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி பங்கு பெற்றார்.

கையில் கயிறு பிடித்து ஆடும் ஆட்டத்தில் இவரும் சேர்ந்து ஆடினார். ஸ்டைலாக ஸ்டெப் போட்டு எம் எல் ஏ டான்ஸ் செய்யும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளது.

இதற்குமுன் பேசும்போது அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து கவர்ந்தார். இங்கிலீஷ் மீடியம் கல்வி பற்றி பேசுகையில் அவர் சந்திரபாபு நாயுடுவின் மீது மிக வினோதமாக கிண்டல் செய்தார். இங்கிலீஷ் தெரியாத மனிதன் அமெரிக்காவுக்கு போனால் என்ன ஆகும் தெரியுமா என்று தன் சுய அனுபவத்தை சபையில் அனைவரும் சிரிக்கும்டியாக விளக்கினார்.

அதனால்தான் ஆங்கிலம் தேவை என்று அனைவரையும் ஆலோசனையில் ஆழ்த்தினார். புதிதாக இப்போது அனைவரோடும் சேர்ந்து டான்ஸ் செய்து மீண்டும் ஒருமுறை ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.