நாளை குரூப் 2ஏ தேர்வு : 1953 பதவிக்கு 7.50 லட்சம் பேர் போட்டி

Published:

IMG 20170805 WA0067 - 2026

நாளை குரூப் 2ஏ தேர்வு நடக்கிறது. 1953 பதவிக்கு நடத்தப்படும் தேர்வை சுமார்
7.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) 1953 காலிப்பணியிடத்தை
நிரப்புவதற்கான குரூப் 2ஏ தேர்வு அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி
அறிவித்தது. அன்று முதல் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி
தொடங்கியது. விண்ணப்பிக்க மே 26ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

தேர்வுக்கு இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று 7.50 லட்சத்திற்கும்
மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கான எழுத்து தேர்வு வருகிற 6ம் தேதி (நாளை) நடக்கிறது. சென்னை, கோவை,
திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து
மாவட்டங்களிலும் இந்த தேர்வு நடக்கிறது.

காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது. தேர்வு
மையங்களுக்கு பேஜர், செல்போன், கால்குலேட்டர் வாட்ச் உள்ளிட்ட மின்னணு
சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Related articles

Recent articles

spot_img