அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஜெகதாப்பட்டிணத்தைசேர்ந்த 8 மீனவர்களை
இலங்கை கடற்படை கைதுசெய்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டிணம் மற்றும் கோட்டைப்பட்டிணத்தில்
600க்கும் அதிகமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கும் தொழில் செய்து
வருகிறார்கள் இந்த தொழிலில் 32 கடலோர கிராம மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று காலை காலை ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து 112
விசைப்படகிலும் கோட்டைப்பட்டிணத்தில் இருந்து 135 விசைப்படகிலும் மீனவர்கள்
மீன்பிடிக்க சென்றனர்.இவர்கள் அனைவரும் நடுக்கடலில் மீன்பிடித்தபோது
ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த மணிகண்டன்(30) சுபாஸ்(20) கருப்பு(30)
சுப்ரமணி(50) அதேபோல பன்னீர்செல்வம்(25) ஜெயசுந்தர்(21) முத்து(30)
குருமூர்த்தி(35) ஆகிய எட்டு பேர்களும் கடலில் நெடுஞ்தீவு அருகே
மீன்பிடித்தபோது இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன்பிடித்தாக கைதுசெய்து
காங்கேசன் துறைமுகத்தில் வைத்துவிசாரணை நடத்திவருகிறார்கள்.
இச்சம்பவம் காரணமாக ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.