முகநூலில் தேசியக்கொடியை அவமதித்து பதிவு! கைதான இளைஞர்!

Published:

fb

இந்திய சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம் என்று முகநூல் பக்கத்தில் பதிவிட்ட இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், தேசியக் கொடியை அவமதித்தது தொடர்பாக, மூன்று பிரிவுகளின் கீழ் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த சுதந்திர தின விழாவின்போது புதுக்கோட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது முகநூலில் தேசியக் கொடியை எரிப்பது போன்ற படத்தை பகிர்ந்து சுதந்திர தினத்தை புறக்கணிப்போம் என்ற வாசகத்தையும் பகிர்ந்துள்ளார்.

மணிகண்டனின் இந்த முகநூல் பதிவை கணேஷ் என்பவர் காமராஜ் நகர் காவல் துறையில் புகார் அளித்தார்
இதனையடுத்து காவல்துறையினர் மணிகண்டன் மீது சமூகவலைதளங்களில் கலவரத்தைத் தூண்டும் வகையிலான தகவல்கள் பரப்பியது போன்ற மூன்று குற்றங்களின் கீழ் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Related articles

Recent articles

spot_img