ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  போட்டியிட்டு, 'ஜெ' இடத்தில் இருந்து வெற்றி பெறுவேன் என்று திருச்சியில் ஜெ. தீபா கூறினார்.

திருச்சியில் ஜெயலலிதா பேரவை பொதுச்செயலாளர் ஜெ. தீபா செய்தியாளர்களிடம் கூறியாதவது: டெங்குவை விசயத்தில் சுகாதாரத்துறை செயலற்ற தன்மையில் உள்ளது.இரட்டை இலை விசயத்தில் எங்களது மனுவும் பரிசீலனையில் உள்ளது. தொண்டர்கள் யாரை முடிவு செய்கிறார்களோ அவர்களுக்கு தான் இரட்டை இலை கிடைக்க வேண்டும்.ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் மத்திய அரசு மற்றும் அவர்கள் கட்சியில் உள்ள சில வலிமையான சக்திகளின் கட்டாயத்தின் பேரில் தான் இணைந்துள்ளார்கள்.

தினகரன் மக்களை பற்றி கவலைப்படாமல் ஆட்சி கலைக்க  வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார்.எடப்பாடி அணியில் இணைந்து பணியாற்றுவேன் என நான் சொன்னதில்லை. அதே சமயம்  தொண்டர்களும்,மக்களும் என்ன விரும்புகிறார்களோ அதன்படி செயல்படுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending