சென்னை: கனிமவள கொள்ளையை விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அண்மைக் காலமாக இந்தியா முழுவதும் நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்துகொள்ள தூண்ட படுவதாகச் செய்திகள் வருகின்றன.தமிழகத்தில் வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி, சுகாதாரத்துறை அதிகாரி அறிவொளியின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவியின் தற்கொலையிலும் மர்மம் உள்ளது. இந்தக் கொலைகளுக்கு அரசியல்வாதிகளின் தூண்டுதலே காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதில் உண்மை இல்லாமல் இல்லை.கனிமவள கொள்ளையை விசாரித்து வரும் சகாயத்துக்கும் கொலை மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வந்த வண்ணம் உள்ளன.இதனை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது. நேர்மையான அதிகாரிகள் அனைவருக்கும் தேமுதிக உறுதுணையாக இருக்கும். நேர்மையான அதிகாரிகளுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
சகாயத்துக்கு மிரட்டல்: விஜயகாந்த் கண்டனம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week