தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள அனைத்து டோல்கேட்களில் டிச.,1 முதல் டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரரி கூறியதாவது… அரசு மற்றும் தனியார் துறையில் ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை அமலாகும்பட்சத்தில், ஊழல் முறைகேடுகள் ஒழிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள அனைத்து டோல்கேட்களில், டிஜிட்டல் கட்டண வசூல் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இது டிச.,1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது என்று கூறினார். இதன்மூலம், டோல்கேட்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும் என்றும், இந்நடைமுறை மூலம் அரசுக்கு தினமும் ரூ.10 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending