
திமுக தலைவர் மு க ஸ்டாலினை அடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியும் திருமாவளவனின் இந்துப் பெண்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் புராணங்களில் பெண்களை இழிவாக கூறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள கே எஸ் அழகிரி திருமாவளவன் தவறாக எதுவும் கூறவில்லை என்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் நினைவிடத்தில் இன்று மலர் தூவிஅஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது
திருமாவளவன் மீது வழக்கு போட எந்த வித முகாந்திரமும் இல்லை. புராணங்களில் உள்ளதை மறுப்பதிவு செய்துள்ளார். புராணங்களில் பெண்களை இழிவாக கூறியுள்ளனர்.
திருமாவளவன் இந்து மத்ததிற்கு எதிராக பேசவில்லை, மதத்தில் உள்ள தவறுகளை நாமே சுட்டிக்காட்டினால் தவறில்லை. திருமாவளவன் தவறாக எதுவும் கூறவில்லை. நாங்கள் திருமாவளவனை ஆதரிக்கிறோம்…. என்றார்
தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். இது எங்கள் தொகுதியாகும்… என்று குறிப்பிட்ட கே.எஸ். அழகிரி, குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்றது அவருக்கு தான் பின்னடைவு.. என்றார்!
மேலும், 12 ஆயிரம் ஆண்டு கால இந்நிய வரலாற்றை மாற்றுவதற்கு பா.ஜ.க. முயல்கிறது, இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே உள்ளனர். இதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது, இந்த குழுவை கலைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே திருமாவளவன் கூறியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கேஎஸ் அழகிரியும் இந்து மத புராணங்களில் பெண்கள் குறித்து தவறாகவே குறிப்பிட்டுள்ளது என்று கண்ணை மூடிக்கொண்டு கூறியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது