கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் தற்போது டோல் கேட்டில் பணம் செலுத்தித்தான் பயணித்து வருகின்றன.
சமீபத்தில் மத்திய அரசு Fastag திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முன் கூட்டியே நாம் பணத்தை மொத்தமாக செலுத்திவிட, தேவையான கட்டணம் நம் வங்கிக்கணக்கிலிருந்து எடுக்கப்படும். இந்தியாவில் இத்திட்டத்தை சிலர் பின்பற்ற துவங்கிவிட்டனர்.
இந்நிலையில், ஜனவரி 1ம் தேதி Fastag கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், Fastag இருந்தால் மட்டுமே வாகன தகுதிச்சான்று வழங்கப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.