
உலக அளவில் மொபைல் நிறுவனங்கள் பலவேறு புதிய புதிய மாடல்களை தொடர்ந்து சந்தைப்படுத்தி வருகின்றன.
அதில் முக்கியமானதாக ஜியோமி நிறுவனம் சீனா தயாரிப்பாக இருப்பினும் சீனா மட்டுமின்றி இந்தியா சந்தைகளில் அதிக மாடல்களை வெளியிட்டு வருகிறது. அதில் குறிப்பாக குறைந்த விலையில் கூடுதல் வசதிகளுடன் இருப்பதால் பயனாளர்கள் விரும்பி ஜியோமி செல்போன்களை வாங்குவார்கள்.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் ஜியோமி நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு கணக்கில் புதிய அப்டேட் வழங்கும் அதே போல இந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கியது. அதை அப்டேட் செய்த செல்போனை செயலிழக்க செய்கிறது என்று புகார் எழுந்துள்ளது. இந்த தகவல் ஜியோமி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜியோமி நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அப்டேட்டில் கோளாறு இருக்கலாம் என்றும் அதனால் இப்போதைக்கு ஆண்ட்ராய்டு 11ஐ பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
விரைவில் இது சரிசெய்யபட்டு அனைத்து நிறுவனங்களுக்கும் நல்ல அண்ட்ராய்டு வசதியை ஏற்படுத்தி தரும் என கூறப்படுகிறது