robbery
robbery

புரோகிதர் வீட்டில் செயின் மற்றும் தோடை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கணபதி நகரில் அழகிய சிற்றம்பலம் என்ற புரோகிதர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை பார்ப்பதற்காக கடந்த 28ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் புரோகிதருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரின் வீட்டிற்கு விரைந்து வந்த சிற்றம்பலம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தோடு மற்றும் செயின் போன்ற நகைகளை மர்ம நபர்கள் திருடி விட்டு சென்றது தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து சிற்றம்பலம் மோகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending