கடலூர்:
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் மாவட்டம் முழுதும் 35 ஆதி திராவிட விடுதிகள் உள்ளன.
இதற்கு நிதி ஒதுக்கியதில் அதிகாரிகளுக்கு கமிஷன் தர விடுதி வார்டன்கள் அலுவலகம் வந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத ரூ.35 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.