fire-acc
fire-acc

விருதுநகர் மாவட்டம் காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் இது வரை 19 பேர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending