bus operation - 2026

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர், ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று 3-வது நாளாக தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதைதொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை, தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

இந்நிலையில், தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending