ஏப்ரல் 22, 2021, 2:38 காலை வியாழக்கிழமை
More

  செல்போன்: நீங்கள் இதில் எல்லாம் கவனம்… இல்லாவிட்டால் ஆபத்து: எச்சரிக்கும் சைபர் கிரைம்!

  ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர் குறைவு பல்வேறு சிறப்பம்சங்கள் ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதே அளவிலான ஆபத்தும் வளர்ந்துக் கொண்டே வருகிறது. முடிந்தளவு ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

  தெரியாத நபருடன் மேற்கொள்ளப்படும் வீடியோ அழைப்புக்கு எதிராக மத்தியபிரதேச சைபர் போலீஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆன்லைன் வீடியோகால் மேற்கொண்டு அதை பதிவு செய்து மிரட்டி பணம் பறித்ததாக சுமார் 15 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக சைபர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

  தெரியாத நபர்களுடன் ஆன்லைன் வீடியோ அரட்டை மேற்கொள்வதற்கு எதிராக சைபர் போலீஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர். காரணம் இது அச்சுறுத்தலாகவும் பணம் பறிப்பதற்கு மேற்கொள்ளப்படும் பொறியாகக் கூட இருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆசை வார்த்தைகள் கூறி இணைய குற்றவாளிகள் குற்றச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

  சுமார் 15 வழக்குகள் பதிவு
  தற்போதுவரை மத்தியபிரதேச மாநிலத்தில் சுமார் 15 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக சைபர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

  அதேபோல் இது ஆரம்பம்தான் எனவும் இதுவரை இதுபோன்ற குற்றச் செயல்களில் சுமார் 200 பேர் இறையாகி இருக்கின்றனர் என தெரிவித்தனர். அறியப்படாத நபர்களுடன் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் தங்களது தனியுரிமை பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும்படியும் இதுபோல் ஏதேனும் குற்றச் செயல்களில் சிக்கி இருந்தால் சைபர் போலீஸாரிடம் தெரிவிக்கும்படியும் சைபர் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

  வீடியோ அழைப்புகள் மூலமாக ஈர்க்கப்படும் ஆண்கள்
  இதுகுறித்து ஏடிஜி சைபர் கிரைம் யோகேஷ் சவுத்ரி கூறுகையில், பெரும்பாலும் ஆண்கள் வீடியோ அழைப்புகள் மூலமாக ஈர்க்கப்படுகிறார்கள் எனவும் அவர்களது நெருக்கமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து பிளாக்மெயிலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

  அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறிக்கின்றனர். இதுகுறித்து புகார் செய்ய பலர் முன்வந்துள்ளனர் என சைபர் பிரிவு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

  மார்ஃபிங் செய்து மிரட்டல்
  இந்த கும்பல் இரண்டு தரப்பில் இயங்குகின்றனர். முதலில் பெண் ஆணுடன் நட்பாக பேசி அவரது நிர்வாண படங்கள் அல்லது வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும்படி கேட்பார், பின் அந்தரங்க வீடியோ கால்களை மேற்கொள்ள தூண்டுவார்.

  இதில் கிடைக்கும் அனைத்து அந்தரங்க புகைப்படம், வீடியோக்களை சேகரித்து வைத்து பணம் கேட்டு மிரட்டுவார்கள் கொடுக்காத பட்சத்தில் இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டுவார்கள். அதுமட்டுமின்றி ஆண்/பெண் என அறியப்படாத நபர் எண்ணில் இருந்து வீடியோ அழைப்பு வரும்.

  அதை எடுத்துவுடன் ஆசை வார்த்தையில் பேசுவார்கள்., பின் தங்களது சராசரி புகைப்படத்தையே மார்ஃபிங் செய்து மிரட்டல் செய்வார்கள், இதை வைரலாகி விடுவோம் என மிரட்டி பணம் வசூலிக்க முயற்சிப்பார்கள்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »