யுகாதி வாழ்த்துக்கள்: துணைமுதல்வர் ட்விட்!

Published:

ops panneerselvam
ops panneerselvam

தெலுங்கு வருடப்பிறப்பாம் யுகாதி திருநாளை உவகையோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை” அன்போடு தெரிவித்துக் கொளவதாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலாவருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

தெலுங்கு வருடப்பிறப்பாம் யுகாதி திருநாளை உவகையோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ‘யுகாதி திருநாள் வாழ்த்துகளை’ அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மொழியால் வேறுபட்டிருந்தாலும், தமிழக மக்களோடு இரண்டறக் கலந்து இன்ப, துன்பங்களில் பங்கெடுத்து சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வரும் நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னட மக்களுக்கு இடையேயான இந்த ஒற்றுமை உணர்வும், நட்புணர்வும் இப்புத்தாண்டில் மேலும் வலுப்பெற வேண்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img