pakistan-cricket-teamஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேப்பியர் நகரில் நடைபெற்ற பி பிரிவு ஆட்டத்தில் இன்று 25 வது லீக் சுற்றுப் போட்டியில், பாகிஸ்தான் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், ஐக்கிய அரபு எமிரேட் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாகத் தீர்மானித்தது. இதை அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, துவக்கம் முதல் நிதானமாக விளையாடியது. துவக்க வீரர் நஸிர் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த அஹ்மத் செஷாத், ஹரிஸ் சொஹெல் இருவரும் நிலைத்து நின்று ஆடினர். செஷாத் 93 ரன் எடுத்தார். சொஹெல் 70 ரன் எடுத்தார். ஷொஹெப் மசூத் 455, மிஸ்பா ஆட்டம் இழக்காமல் 65, உமர் அக்மல் 19, அப்ரிதி 21 என ரன் குவித்தனர். இந்த இன்னிங்க்ஸில் பாகிஸ்தான் வீரர்கள் மொத்தமாக 10 சிக்ஸர் அடித்தனர். இதனால் 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் குவித்தது. இதை அடுத்து 340 ரன் என்ற இமாலய இலக்குடன் யுஏஇ அணி களம் இறங்கியது. பின்னர் ஆடத் தொடங்கிய யுஏஇ அணி, சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. நடு வரிசையில் ஷைமன் அன்வர் 62 ரன்னும், குர்ரம் கான் 43 ரன்னும் எடுத்து நம்பிக்கை அளித்தனர். அம்ஜத் ஜாவத் 40 ரன் எடுத்தார். இருப்பினும் அந்த அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 210 ரன்களே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 129 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending