கோவை: தேர்தல் காலங்களில், நம் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு முறைகேடுகள் நடைபெறுகிறது என்று பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். தமிழகத்தின் கோவைக்கு வந்திருந்த அமித் ஷா, இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது… பாஜக., உறுப்பினர் சேர்க்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. தேசிய அளவில் 10 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க திட்டமிடப்பட்டது. அதில் 6.20 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். இது திட்டமிடப்பட்டதில் 60 சதவீதம். மீதமுள்ள 40 சதவீதத்தை வரும் 31 ஆம் தேதிக்குள் சேர்க்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக்கு 53 ஆயிரம் விண்ணப்பப் புத்தகங்களை வினியோகித்தோம். அதில் 12 ஆயிரம் புத்தகங்கள் உறுப்பினர் சேர்க்கப்பட்டு திரும்ப வந்துள்ளது. மீதியுள்ள புத்தகங்களையும் நிரப்பி உறுப்பினர்களைச் சேர்த்து அனுப்ப வேண்டுகிறேன். உறுப்பினர் சேர்க்கை என்பதை தீவிர உறுப்பினர் சேர்க்கையாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரும் 100 புதிய உறுப்பினர்களை இந்த மாதத்துக்குள் சேர்க்க வேண்டும். இப்படிச் செய்தால் இலக்கை எளிதில் எட்டலாம். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 19 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். வரும் 31-ஆம் தேதிக்குள் 24 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அதற்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். 6.20 கோடி உறுப்பினர்களில் 8 முதல் 10 லட்சம் உறுப்பினர்கள் மிஸ்டுகால் கொடுத்து தானாக முன்வந்து சேர்ந்துள்ளனர். எனவே 24 லட்சம் உறுப்பினர்களைச் சேர்ப்பது என்பது எளிதானதுதான். தமிழகத்தில் பாஜக.,வை வலிமையாக்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஏனெனில் நான் பார்த்ததில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில்தான் தேர்தல் நேரத்தில் அதிக ஊழல் நடக்கிறது. இதனை முறியடிக்க பூத் வாரியாக உறுப்பினர்களை வலிமையாக்க வேண்டும். நாம் 31-ஆம் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை இலக்கை எட்ட வேண்டும். இதற்காக தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருக்கிறேன்… என்றார் அமித் ஷா.
தேர்தலின்போது அதிக ஊழல் நடப்பது தமிழகத்தில்தான்!: முறியடிக்க தயாராகுமாறு அமித் ஷா அறைகூவல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari