தேர்தலின்போது அதிக ஊழல் நடப்பது தமிழகத்தில்தான்!: முறியடிக்க தயாராகுமாறு அமித் ஷா அறைகூவல்

Amith-Shah கோவை: தேர்தல் காலங்களில், நம் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு முறைகேடுகள் நடைபெறுகிறது என்று பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். தமிழகத்தின் கோவைக்கு வந்திருந்த அமித் ஷா, இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது… பாஜக., உறுப்பினர் சேர்க்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. தேசிய அளவில் 10 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க திட்டமிடப்பட்டது. அதில் 6.20 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். இது திட்டமிடப்பட்டதில் 60 சதவீதம். மீதமுள்ள 40 சதவீதத்தை வரும் 31 ஆம் தேதிக்குள் சேர்க்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக்கு 53 ஆயிரம் விண்ணப்பப் புத்தகங்களை வினியோகித்தோம். அதில் 12 ஆயிரம் புத்தகங்கள் உறுப்பினர் சேர்க்கப்பட்டு திரும்ப வந்துள்ளது. மீதியுள்ள புத்தகங்களையும் நிரப்பி உறுப்பினர்களைச் சேர்த்து அனுப்ப வேண்டுகிறேன். உறுப்பினர் சேர்க்கை என்பதை தீவிர உறுப்பினர் சேர்க்கையாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரும் 100 புதிய உறுப்பினர்களை இந்த மாதத்துக்குள் சேர்க்க வேண்டும். இப்படிச் செய்தால் இலக்கை எளிதில் எட்டலாம். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 19 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். வரும் 31-ஆம் தேதிக்குள் 24 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அதற்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். 6.20 கோடி உறுப்பினர்களில் 8 முதல் 10 லட்சம் உறுப்பினர்கள் மிஸ்டுகால் கொடுத்து தானாக முன்வந்து சேர்ந்துள்ளனர். எனவே 24 லட்சம் உறுப்பினர்களைச் சேர்ப்பது என்பது எளிதானதுதான். தமிழகத்தில் பாஜக.,வை வலிமையாக்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஏனெனில் நான் பார்த்ததில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில்தான் தேர்தல் நேரத்தில் அதிக ஊழல் நடக்கிறது. இதனை முறியடிக்க பூத் வாரியாக உறுப்பினர்களை வலிமையாக்க வேண்டும். நாம் 31-ஆம் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை இலக்கை எட்ட வேண்டும். இதற்காக தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருக்கிறேன்… என்றார் அமித் ஷா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories