sea insects
sea insects

அரிய வகை கடல்வாழ் உயிரினமான கடல் அட்டைகளை பிடிக்கவும், விற்பனை செய்யவும் இந்திய அரசு தடை விதித்துள்ளது.

இருப்பினும் மருத்துவ குணம் கொண்ட கடல் அட்டைகளுக்கு பல்வேறு நாடுகளில் கிராக்கிஇருப்பதால், சட்ட விரோதமாக கடல் அட்டைகள் பிடிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு கடத்தப்படுகின்றன.

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகேயுள்ள மொட்டைக்கோபுரம் கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கடற்கரையில் படகில் இருந்து மூன்று கேன்களில் ஒரு நபர் கடல் அட்டைகளை கீழே இறக்கிக் கொண்டிருந்தார். போலீஸார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த ஷேக் மைதீன் (28) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், 50 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending