vijeyandra saraswati
vijeyandra saraswati

காஞ்சிபுரம் சங்கர மடம் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் கடந்த 19-ம் தேதி வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் காமக்கோடி பீடம் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்று அதிகம் உள்ள இந்தச் சூழ்நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சம் வழங்க சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த உதவித் தொகையை மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், நிர்வாகிகள் பம்மல் விஸ்வநாதன், வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபாலன், டி.எஸ்.ராகவன் ஆகியோர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending