annamalai karur - 2026

என்னை சந்திக்க வரும் தொண்டர்கள், தலைவர்கள் யாரும் இனிமேல் பூங்கொத்து, மாலை, மலர் கிரீடம், சால்வை கொண்டு வர வேண்டாம்” என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் கைப்பட எழுதிய கடிதத்தை, தமிழக பாஜக வெளியிட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், “என்னை சந்திக்க வரும் போது பூங்கொத்து, மாலை, மலர் கிரீடம் போன்றவற்றை கொண்டு வருவதை தவிர்க்கும் படி அன்போடு வேண்டுகிறேன்.

அதற்கு பதிலாக, நமது கட்சியின் பத்திரிகையான, ‘ஒரே நாடு’ மாதமிருமுறை இதழுக்கு 3 ஆண்டுகளுக்கான சந்தா செலுத்துவது எனக்கு சால்வை, மாலை, கிரீடம் அணிவிப்பதை விட பெரும் மகிழ்ச்சி தரும்.

இதையே நான் பெரிதும் விரும்புகிறேன். நமது கட்சி இதழை ஆதரிப்பதன் மூலம் நமது சித்தாந்தம், நமது சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்வோம். உங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டுகிறேன்” எனக் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்… : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending