tnpsc சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டசெய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வு-II ல் (தொகுதி-II) அடங்கிய துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர்-நிலை-II, தொழிலாளர் உதவி ஆய்வாளர், நிதித்துறையில் உதவிப் பிரிவு அலுவலர், சட்டத்துறையில் உதவிப் பிரிவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை  ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர்,  வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 19 பதவிகளுக்கான 1130 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 08.11.2014 மு.ப & பி.ப. மற்றும் 09.11.2014 மு.ப & பி.ப. ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது. அதில் 11497 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் அளித்துள்ள தகுதிகள் மற்றும் விவரங்கள் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட 5635 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. 26.03.2015 முதல், சென்னை-3 பிரேசர் பாலச்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள், நேரம் குறித்த தகவல்கள் தனியே அனுப்பப்படும். குறிப்பிட்ட நாளில் உரிய அசல் சான்றிதழ்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளத்தவறினால், அன்னார் அடுத்தக்கட்ட தெரிவு நிலைகளுக்கான தகுதியினை இழந்தவராகிறார். சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் மட்டுமே அடுத்தக்கட்ட நிலைக்கு உரிமை கோர இயலாது. இவ்வாறு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்  வெ. ஷோபனா வெளியிட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending