deadbody
deadbody

விஷ சாக்பீஸ் உண்டு சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி வெனிஸ் தெருவில் அந்தோணிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோசப் ரூபன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளை ஜோசப் ரூபன் சரியாக கவனிக்கவில்லை. இதனால் அவரது பெற்றோர் ஜோசப் ரூபனை கண்டித்துள்ளனர். இதற்கிடையில் ஜோசப் ரூபன் தனக்கு வேறொரு செல்போன் வாங்கித் தருமாறு பெற்றோரிடம் வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சிறுவன் கரையான், எறும்பு உள்ளிட்ட பூச்சிகள் வராமல் இருப்பதற்காக வீட்டில் வைத்திருந்த கோடு போடும் விஷ சாக்பீஸை உண்டு தற்கொலை செய்துள்ளார்

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending