money - 2026

மினி பஸ் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக 5 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரியை காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு அருகே துளசிராமன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது மினி பஸ் உரிமத்தை புதுப்பிப்பதற்காக திருவள்ளூரிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது சென்னை முகப்பேரில் வசித்து வரும் வட்டார போக்குவரத்து சூப்பிரண்டு விஜயகுமார் என்பவர் மினி பஸ் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் ஆனால் 5 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து லஞ்சம் தர விரும்பாத துளசிராமன் காஞ்சிபுரத்திலுள்ள லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன் படி கண்காணிப்பாளர் விஜயகுமார் லஞ்சப் பணத்தை வாங்க முயன்றபோது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அவரை கைது செய்து விட்டனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending