robbery
robbery

13 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்

திருச்சி மாவட்டத்திலுள்ள இனாம்குளத்தூர் பகுதியில் ஐஸ்வர்யா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending