சைவ சமயத்தில் முதல் குருவாகவும், சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக, நந்திதேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்.
  • நந்தியின் நிறம் வெள்ளை. வெண்மை தூய்மையைக் குறிப்பதாகும். அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். 
  • பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பாகும். யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனையும், நந்தியையும் வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.
  • அதுமட்டுமின்றி எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.
  • நந்தி பகவானை பிரதோஷ நாள் அன்று விரதமிருந்து பிரதட்சணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
  • நந்தி பகவானை மூன்று முறை பிரதட்சணம் செய்தால் எண்ணிய காரியம் நிறைவேறும்.
  • நந்தி பகவானை ஐந்து முறை பிரதட்சணம் செய்தால் ஜெயம் உண்டாகும்.
  • நந்தி பகவானை ஏழு முறை பிரதட்சணம் செய்தால் துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் உண்டாகும்.
  • நந்தி பகவானை ஒன்பது முறை பிரதட்சணம் செய்தால் புத்திரப்பாக்கியம் கிடைக்கும்.
  • நந்தி பகவானை 11 முறை பிரதட்சணம் செய்தால் ஆயுள் விருத்தி உண்டாகும்.
ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending