இனி சத்தமில்லாம பிடிக்காத குரூப்லேர்ந்து வெளியேறலாம்.. வாட்ஸ்அப் அப்டேட்!

whatsapp - 2026

வாட்ஸ்அப் குழுவில் இருந்து ‘நோட்டிபிகேஷன்’ இன்றி அமைதியாக வெளியேறும் வசதி விரைவில் வரவுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் முக்கிய சமூக வலைத்தளமாக வாட்ஸ்அப் மாறியுள்ளது.

இதில் புகைப்படங்கள், வீடியோக்கள், டாக்குமெண்ட்கள் என அனைத்துதரப்பு தரவுகளையும் அனுப்பும் வசதி உள்ளது பெரும் பயனாக உள்ளது.

மேலும் பயன்பாட்டுக்கு மிகவும் எளிதாக இருப்பதால் தனிப்பட்ட விஷயத்திற்காக மட்டுமின்றி உலகம் முழுவதும் அலுவலக வேலை ரீதியாகவும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, பயனர்களின் வசதிக்காக அவர்களை கவரும் வகையில் அவ்வப்போது இதில் ‘அப்டேட்’களும் வந்தவண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், தற்போது புதிய அப்டேட் கொண்டுவரப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அதாவது, வாட்ஸ்அப் குழுவில் இருந்து எந்தவித அறிவிப்புமின்றி வெளியேற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சாதாரணமாக வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறினால் குரூப் சாட்டில் ‘நோட்டிபிகேஷன்’ வரும்.

இது குழுவில் உள்ள அனைவருக்கும் தெரியும்படி இருக்கும். ஆனால் இதனை பலரும் விரும்பமாட்டார்கள். அப்படியே வெளியே வந்தால் பின்னர் பலரும் கால்செய்து விசாரிப்பது பலருக்கும் பிடிக்காது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

வரவிருக்கும் புதிய வசதியில் நீங்கள் குழுவில் இருந்து வெளியேறினால் குரூப் சாட்டில் அவ்வாறு அறிவிப்பு வராது. ஆனால், அந்த குழுவின் ‘அட்மின்’ மட்டும் தெரிந்துகொள்ளும்படி கொண்டுவரப்பட உள்ளது.

WABetaInfo வெளியிட்டுள்ள தகவலில், விரைவில் வாட்ஸ் அப் புதிய அப்டேட்டை கொடுக்க உள்ளது. அதில் குரூப் அட்மின்கள் மட்டும், குரூப்பில் இருந்து யார் வெளியேறி இரு க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மற்ற உறுப்பினர்களுக்கு யார் வெளியேறி இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு சாட்பாக்ஸில் காட்டாது என தெரிவித்துள்ளது.

ஒருவேளை யாரெல்லாம் குரூப்பில் இருக்கிறார்கள் என தெரிய வேண்டும் என்றால், குரூப் இன்ஃபோவுக்கு சென்று பார்த்தால் மட்டுமே மற்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

அல்லது குரூப் அட்மின் குரூப் உறுப்பினர்களுக்கு சொல்ல வேண்டும். இது பிரைவசியாகவும் பார்க்கப்படுகிறது.

ஒரு குரூப்பில் இருப்பது பிடிக்கவில்லை என்றால் சத்தமில்லாமல் வெளியேறிக் கொள்ளலாம். வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டாவிற்காக உருவாக்கப்பட்ட அம்சமாக இருந்தாலும், எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு மற்றும் வாட்ஸ்அப் பீட்டாவிலும் வரும்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

வாட்ஸ்அப்பின் இந்த அப்டேட் வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இன்னும் இது சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை, உருவாக்க நிலையிலே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories