காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது அவசியமானது என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.
கால தாமதமின்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சம்மந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அரசுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது; விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அவசியம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக தலைவர்கள் முரண்பட்ட வகையில் பேசிக் கொண்டிருக்கும் போது கிரண் பேடியின் கடிதம் தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. குறிப்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருக்கும் போது கிரண் பேடி சரியான வழி காட்டியுள்ளார்.