காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பில் மோடிக்கு கிரண் பேடி கடிதம்

Published:

kiran bedi - 2026

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது அவசியமானது என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.

கால தாமதமின்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சம்மந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அரசுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது;  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அவசியம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக தலைவர்கள் முரண்பட்ட வகையில் பேசிக் கொண்டிருக்கும் போது கிரண் பேடியின் கடிதம் தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. குறிப்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருக்கும் போது கிரண் பேடி சரியான வழி காட்டியுள்ளார்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

IMG 20180402 WA0048 - 2026 IMG 20180402 WA0049 - 2026

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img