கோலிவுட் திரையுலகினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். திரையரங்க உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்த போதிலும் இன்னும் தீர்வு ஏற்படவில்லை
இந்த நிலையில் இந்த பிரச்சனையை அரசாங்கத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும், அரசு பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் விஷால் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக நாளை மறுநாள் கோட்டையை நோக்கி பேரணியாக சென்று முதல்வரிடம் கோரிக்கை மனு ஒன்றை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தரவுள்ளனர்.
இந்த நிலையில் தேவைப்பட்டால் திரையுலகிற்கு என தனிவாரியம் அமைக்கப்படும் என்று செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த செய்தி & விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த செய்தி & விளம்பரத்துறை அமைச்சர் *திரு கடம்பூர் ராஜு* அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் pic.twitter.com/iwt0mZn1z2
— Vishal (@VishalKOfficial) April 2, 2018



