வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த ஐ.டி. ஊழியர் லாவண்யா காவல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும், “எனது தைரியத்தால் மட்டும் இதிலிருந்து விடுபடவில்லை. காவல்துறை உள்ளிட்ட பலரது ஆதரவால்தான் விடுபட்டுள்ளேன். என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்றிய காவல்துறைக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.
மேலும் தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், நிம்மதியாக வாழ்கை வாழ உள்ளதாகவும் கூறினார். தன்னை எடுத்துகாட்டாக எடுத்து கொண்டு பெண்கள் தங்கள் வாழ்கையில் போராட வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.