பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைன் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கா ன விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், பொன்.பாண்டியன், முரளி ஆகியோர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள், வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிக்க முடியும் என்று கேள்வியெழுப்பியதோடு, வரைவோலை, ரொக்கம், டிடி மூலமாக விண்ணப்பிக்க முடியுமா? எனவும் வினா எழுப்பினர். இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் பொறியியல் விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாகவும் செலுத்தலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைன் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.