‘தங்கல்’ படத்தின் மூலம் மிகுந்த பிரபலமடைந்தவர்கள் போகாட் சகோதரிகள். கீதா, பபிதா, ரித்து மற்றும் சங்கீதா ஆகிய நான்கு போகாட் சகோதரிகள் மீது மல்யுத்த சம்மேளனம் ஒழுங்கீன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் தேசிய முகாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
லக்னோவில் நடைபெற்ற தேசிய முகாமை புறக்கணித்ததற்காக கீதா மற்றும் பபிதா மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போகாட் சகோதரிகள் நான்கு பேருக்கும், மல்யுத்த சம்மேளனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மொத்தம் 15 மல்யுத்த வீரர்-வீராங்கனைகளும் தேசிய முகாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.