மதுரையில் கம்பன் கழக அறக்கட்டளை சார்பில் ஆண்டாள்புரம் வசுதாரா வளாகம் மீனாட்சி அரங்கத்தில் கம்பன் விழா இன்று துவங்குகிறது. இன்று மாலை 5:30 மணிக்கு பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் கம்பன் உருவப்பட ஊர்வலத்தை கனரா வங்கி அலுவலர் காமேஸ்வரன், முனைவர் பத்மலட்சுமி துவக்குகின்றனர்.
மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி இல.சொ.சத்தியமூர்த்தி நுால் வெளியிட சேது சொக்கலிங்கம், ஜே.சுரேஷ் பெற்று கொள்கின்றனர். ஸ்டேட் வங்கி உதவி பொது மேலாளர் ஹரீஷ், கனரா வங்கி துணை பொது மேலாளர் சண்முகம் பரிசுகள் வழங்குகின்றனர். எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பேசுகிறார்.
நாளை மாலை 6:00 மணிக்கு பேராசிரியர் கு.ராமமூர்த்தி தலைமையில் உரை அரங்கம், இரவு 7:45 மணிக்கு பாலா நந்தகுமார் குழுவினரின் நாட்டியாஞ்சலி நடக்கிறது.
வரும் மே 20 காலை 10:00 மணிக்கு பாரதி பாஸ்கர் தலைமையில் சிந்தனை அரங்கம், மாலை 6:00 மணிக்கு விருது வழங்கும் விழா, இரவு 7:15 மணி இலங்கை ஜெயராஜ் தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.
INCOMPLETE WITHOUT NELLAI KANNAN.